தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை! – வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 29-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், வரும் 25 மற்றும் 26-ம் தேதிகளில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
