“ராசியில்லாத நடிகை” என முத்திரை! மனம் திறந்த டாப்ஸி !
ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில், அந்தப் படத்தின் ஹீரோவின் மனைவிக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதால், படத்திலிருந்து தன்னை மாற்றிவிட்டதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், தொடர்ந்து சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், தனக்கு “ராசியில்லாத நடிகை” என்ற முத்திரை குத்தப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் தனிப்பட்ட காரணங்களாலும், திரைப்படங்களின் வெற்றி தோல்விகளாலும் நடிகர்களுக்கு பல்வேறு விதமான கருத்துகள் உருவாகும் நிலையில், தன்னைப் பற்றிய இந்த அனுபவங்களை டாப்ஸி தற்போது வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
தனது திரைப்பயணத்தில் சந்தித்த இந்த சம்பவங்கள் குறித்து டாப்ஸி பேசியிருப்பது தற்போது சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
