“நேர்மையான விசாரணை அவசியம்!” – வீரமணி வழக்கில் அமீர், வெற்றிமாறன்!
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான வழக்கு குறித்து இயக்குநர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறன் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான சம்பவங்கள் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், சிறுமிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் செயல்கள் மன்னிக்க முடியாதவை என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வீரமணியை பாதுகாக்க முயன்றதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் அல்லது அதிகாரமிக்க நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குறித்து விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அமீர், வெற்றிமாறன் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளம் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான சட்ட, உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித தளர்வும் இன்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இருவரும் தங்களது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளன
