செய்திகள்

“ஹீரோ… ஜீரோ!” – விஜய்யை கடுமையாக விமர்சித்த இபிஎஸ்!

“ஹீரோ... ஜீரோ!” – விஜய்யை கடுமையாக விமர்சித்த இபிஎஸ்!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது பேசிய இபிஎஸ், “நடிப்பில் முதலமைச்சர் விஜய் ஹீரோ; ஆனால் நிர்வாகத்தில் ஜீரோ” என விமர்சித்தார்.

மேலும், விஜய் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தேசிய விருது பெறவில்லை என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார். “70 படங்கள் நடித்தும் ஒரு தேசிய விருது வாங்க முடியவில்லை; அங்கேயே பாஸ் பண்ண முடியல” என அவர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் அரசியலுக்கு வந்து முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது நிர்வாகத்தை முன்வைத்து இபிஎஸ் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இபிஎஸ்-ன் இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *