“சொல்ல முடியாத சோகம்…” – கரூர் சம்பவ நினைவு நாளில் முதல்வர் விஜய் உருக்கம்!
கரூர் சம்பவ நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இதே நாளில் நடைபெற்ற சம்பவம், தனது வாழ்நாளிலும், கரூர் சொந்தங்களின் வாழ்விலும், தமிழ்நாட்டு மக்களின் மனதிலும் ஆறாத ரணமாகவும், தீராத வலியாகவும் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த துயரமான நாளை நினைவுகூர்ந்த விஜய், “சொல்ல முடியாத சோகத்தை சுமந்து நிற்கிறோம்” என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், அந்த சம்பவத்தில் தங்களது உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதலும், ஆதரவும் அளிப்பதுடன், ஒருவருக்கொருவர் துணையாகவும் அரணாகவும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்தின் நினைவு நாளில் விஜய் வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.
