நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு – 10 மலையேற்ற வீரர்கள் மாயம்!
நேபாளத்தின் மனங் மாவட்டத்தில், மலையேற்ற முகாம் அருகே ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 10 மலையேற்ற வீரர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
7,126 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஹிம்லுங் ஹிமால் மலையில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடுமையான வானிலை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாயமான மலையேற்ற வீரர்களின் நிலை குறித்து உடனடி தகவல் கிடைக்காததால், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக நேபாள அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
