செய்திகள்

ஸ்குவாஷ் வீரர் அபய் சிங்கிற்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை!

ஸ்குவாஷ் வீரர் அபய் சிங்கிற்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் அபய் சிங்கிற்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அபய் சிங்கிற்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

அபய் சிங்கின் சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் தொடர்ந்து சாதித்து வரும் நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *