செய்திகள்

ஹெல்மெட் முதல் வாட்டர் பாட்டில் வரை.. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரப்போகும் புதிய சைக்கிள்!

ஹெல்மெட் முதல் வாட்டர் பாட்டில் வரை.. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரப்போகும் புதிய சைக்கிள்!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நவீன மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு ஹெல்மெட், தண்ணீர் பாட்டில் மற்றும் சைக்கிள் பூட்டு உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய நவீன மிதிவண்டிகளை வழங்குவதற்கான டெண்டர் ஏற்கனவே கோரப்பட்டிருந்தது.

இந்த டெண்டர் செப்டம்பர் 28, 2026-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், தற்போது அதன் கால அவகாசம் அக்டோபர் 13, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிதிவண்டிகளின் வடிவமைப்பு மற்றும் நிறம் உள்ளிட்ட டெண்டர் விதிமுறைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றங்களுடன், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச மிதிவண்டிகள் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *