அமைச்சரவையில் மாற்றம்? புதிய முகங்களுக்கு வாய்ப்பு!
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர்களில் மூன்று பேர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போது முதலமைச்சர் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகள், வேறு ஒரு அமைச்சருக்கு ஒதுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மதுரையில் தற்போது ஒரு அமைச்சர் மட்டுமே இருப்பதால், கூடுதலாக ஒரு அமைச்சருக்கு வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடைபெற உள்ள இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு, அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
