செய்திகள்

பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை! 5 கோடி இந்திய குழந்தைகள் பாதிப்பு

பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை! 5 கோடி இந்திய குழந்தைகள் பாதிப்பு

உலகம் முழுவதும் 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி 24.4 கோடி குழந்தைகளுக்கு பள்ளிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவில் மட்டும் சுமார் 5 கோடி குழந்தைகள் பள்ளிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உலக அளவில் பள்ளிகளில் சுகாதார வசதி இல்லாத குழந்தைகளில் 4-ல் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் பள்ளிகளில் சுகாதார வசதி இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த காலத்தை ஒப்பிடும்போது 4 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் சுமார் 20 லட்சம் குழந்தைகளுக்கு குடிநீர் வசதியும், சுமார் 2 கோடி குழந்தைகளுக்கு தனிநபர் சுகாதார வசதியும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பள்ளிகளில் அடிப்படை சுகாதார வசதி இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக நைஜீரியாவில் 3.4 கோடி, எத்தியோப்பியாவில் 2.6 கோடி, காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1.1 கோடி, இந்தோனேசியாவில் 80 லட்சம் குழந்தைகள் உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

2030-ஆம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் குடிநீர், சுகாதாரம் மற்றும் தனிநபர் சுகாதார வசதிகளை வழங்க வேண்டும் என உலக நாடுகள் இலக்கு நிர்ணயித்துள்ளன.

ஆனால், தற்போதைய முன்னேற்ற வேகம் போதுமானதாக இல்லை என்றும், இலக்கை அடைய தற்போதைய வேகத்தைவிட பல மடங்கு வேகமாக பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *