செய்திகள்

யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் கொள்ளை! 4 பேர் கைது – 99 சவரன் மீட்பு!

யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் கொள்ளை! 4 பேர் கைது – 99 சவரன் மீட்பு!

நாகர்கோவிலில் பிரபல யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாக முருகேசன், இசக்கி பாண்டி, முருகன் மற்றும் தங்க பாண்டி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 99 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள நகைகள் எங்கே உள்ளன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *