மக்களே கவனமா இருங்க.. 10 நிமிடத்தில் 1.5 லிட்டர் கோலா குடித்த இளைஞர் உ*ரிழப்பு
சீனாவின் பெய்ஜிங்கில், கடும் வெப்பத்தால் குளிர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக 22 வயது இளைஞர் ஒருவர் 1.5 லிட்டர் கோகோ-கோலாவை சுமார் 10 நிமிடங்களில் வேகமாக குடித்த சம்பவம் மருத்துவ உலகில் கவனம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் உண்மையில் 2021-ல் பதிவான ஒரு மருத்துவ வழக்காகும்; தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோலாவை குடித்த சுமார் 6 மணி நேரத்திற்குப் பிறகு அந்த இளைஞருக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பெய்ஜிங் சாயோயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில் அவரது இதயத் துடிப்பு அதிகரித்திருந்ததுடன், ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. CT ஸ்கேன் பரிசோதனையில் குடல் பகுதியில் அதிக அளவு வாயு மற்றும் கல்லீரலுக்குச் செல்லும் முக்கிய ரத்த நாளமான போர்டல் வெயினிலும் வாயு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கல்லீரலுக்கு ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, ‘ஷாக் லிவர்’ எனப்படும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து சுமார் 18 மணி நேரத்துக்குப் பிறகு அவர் உயிரிழந்தார்.
எனினும், 1.5 லிட்டர் கோலாவை வேகமாக குடித்ததே நேரடியாக ம*ணத்துக்கு காரணம் என்று உறுதியாக கூற முடியாது என சில மருத்துவ நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். வேறு காரணிகள், குறிப்பாக பாக்டீரியா தொற்று, உடலில் ஏற்பட்ட அதிகப்படியான வாயு உருவாக்கத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அதிக அளவு குளிர்பானங்களை ஒரே நேரத்தில் வேகமாக அருந்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
