செய்திகள்

“உங்கள் அன்புக்கு நன்றி..!” ரசிகர்களின் ஆதரவால் நெகிழ்ந்த நடிகர் ரிஷிகாந்த்!

“உங்கள் அன்புக்கு நன்றி..!” ரசிகர்களின் ஆதரவால் நெகிழ்ந்த நடிகர் ரிஷிகாந்த்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் கவனம் பெற்று வரும் நடிகர் ரிஷிகாந்துக்கு, சமீபகாலமாக ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் ரிஷிகாந்த் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவானது. இந்தப் படத்திற்காக ரிஷிகாந்தின் நடிப்பை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பலரும் பாராட்டினர். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூட அவரது நடிப்பைப் பாராட்டி, எதிர்காலத்தில் அவரை இயக்க விருப்பம் இருப்பதாக X-ல் தெரிவித்துள்ளார். அதற்கு ரிஷிகாந்த், “Thank you so much. This really means a lot” என நெகிழ்ச்சியுடன் பதிலளித்திருந்தார்.

மேலும், ‘மொத ராத்திரி’ படத்தின் வெற்றி விழாவிலும் பேசிய ரிஷிகாந்த், தன்னை தங்களது வீட்டு பையனாக நினைத்து ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தப் படத்திற்காக தானும் இயக்குநர் ராஜா கருப்பசாமியும் சுமார் ஆறு ஆண்டுகள் பயணம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து கிடைத்து வரும் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் சமூக வலைதளங்கள் மூலம் ரிஷிகாந்த் நன்றி தெரிவித்து வருவது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. சிறிய கதாபாத்திரங்களில் தொடங்கி, தற்போது கதாநாயகனாக ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகராக ரிஷிகாந்தின் பயணம் தொடர்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *