செய்திகள்

“உங்களுக்கு Fans எல்லாம் இருக்காங்களா?”அப்போவே சொன்ன சிவகார்த்திகேயன்! தயாரிப்பாளர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் தெரியுமா?

“உங்களுக்கு Fans எல்லாம் இருக்காங்களா?”அப்போவே சொன்ன சிவகார்த்திகேயன்! தயாரிப்பாளர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஆரம்ப கால சினிமா பயணம் குறித்து பேசியுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற தனது நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பில், சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கு இருந்த ரசிகர்கள் குறித்து நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் கூறுகையில், சினிமாவுக்கு வந்த புதிதில் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது ஒரு படத்தின் படப்பிடிப்பை பார்க்க தனது ரசிகர்கள் சிலர் வந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர்களை சந்தித்துவிட்டு திரும்பி வந்தபோது, அங்கிருந்த ஒரு தயாரிப்பாளர், “என்ன சிவா, யாரு இதெல்லாம்?” என கேட்டதாக கூறினார்.

அதற்கு தான், “சார், என்னுடைய ரசிகர்கள் கொஞ்ச பேர் வந்திருக்காங்க. அதான் அவங்களை பார்த்துட்டு வரேன்” என்று பதிலளித்ததாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட அந்த தயாரிப்பாளர், “உனக்கு ரசிகர்கள் எல்லாம் வந்துட்டாங்களா?” என்ற ஆச்சரியத்துடன் கேட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

மேலும், ஆரம்ப காலத்தில் கிடைக்கும் ரசிகர்களின் ஆதரவு நீண்ட காலம் தொடருமா என்ற சந்தேகம் திரைத்துறையில் சிலருக்கு இருந்ததாகவும், ஆனால் தனது ரசிகர்கள் தொடர்ந்து தன்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அப்போதே தனக்கு இருந்ததாகவும் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

இன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகராக வளர்ந்துள்ள நிலையில், தனது ஆரம்ப கால ரசிகர்களை நினைவுகூர்ந்து சிவகார்த்திகேயன் பகிர்ந்த இந்த சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *