அக்.8 மின்தடை பட்டியல் வெளியீடு.. உங்கள் பகுதியும் இதில் இருக்கிறதா?
தமிழகத்தில் மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (அக்.8) பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மின் கம்பங்கள், துணை மின் நிலையங்கள் மற்றும் மின்விநியோக கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் அல்லது மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையைப் பொறுத்தவரை தாம்பரம், ராமாபுரம், ராஜகில்பாக்கம், திருவேற்காடு, திருவான்மியூர், பெசன்ட் நகர், முடிச்சூர், குரோம்பேட்டை, மேடவாக்கம், குன்றத்தூர் மற்றும் கடப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாக முடிவடைந்தால், அதற்கு முன்னதாகவே மின்சாரம் மீண்டும் வழங்கப்படலாம்.
எனவே, பொதுமக்கள் மின்தடை ஏற்படும் நேரத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு செல்போன் சார்ஜ், குடிநீர், அவசர மின் சாதனங்கள் உள்ளிட்ட தேவைகளை தயாராக வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் பகுதி இந்தப் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து அதற்கேற்ப பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
