செய்திகள்

மறைந்தார் வி.எஸ்.பாபு …அவரும் அவரது அரசியல் பயணமும்…!

மறைந்தார் வி.எஸ்.பாபு ...அவரும் அவரது அரசியல் பயணமும்...!

சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து அரசியல் கவனம் பெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானார். அவருக்கு வயது 75.

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபு, தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்த அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஸ்டாலினை வீழ்த்திய தேர்தல் வெற்றி

2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, 82,997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகள் பெற்ற நிலையில், 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை தோற்கடித்தார். 2011 முதல் கொளத்தூர் தொகுதியைத் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஸ்டாலினுக்கு இது பெரும் அரசியல் பின்னடைவாக அமைந்தது.

வி.எஸ்.பாபு தனது அரசியல் பயணத்தை திமுகவில் தொடங்கியவர். 2006 சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர், 2026 பிப்ரவரி 7-ம் தேதி தவெகவில் இணைந்தார்.

அதன்பிறகு கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு எதிராக தவெக சார்பில் களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவு தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.