செய்திகள்

சொத்து விவரம் தாக்கல் செய்தால்தான் பதவி உயர்வு.. அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு!

சொத்து விவரம் தாக்கல் செய்தால்தான் பதவி உயர்வு.. அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பணியில் உள்ள ஊழியர்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை ஆன்லைன் மூலம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விவரங்களை முறையாக தாக்கல் செய்த ஊழியர்கள் மட்டுமே பதவி உயர்வுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசு ஊழியர்கள் தங்கள் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள், சேமிப்புகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதேபோல், வேறு நபர்களின் பெயரில் சொத்துகள் இருந்தாலும், அந்த சொத்துக்கும் ஊழியருக்கும் உள்ள தொடர்பு குறித்த விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சொத்து விவரங்களை அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விவரங்களை சமர்ப்பிக்காத அரசு ஊழியர்கள் மீது, அரசுப் பணியாளர் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவும், அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை முறையாக கண்காணிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், தமிழக அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை சரிபார்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *