டெல்லி விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள போ*ப்பொருள் பறிமுதல்!
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள க*சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாங்காக்கில் இருந்து டெல்லிக்கு வந்த இந்தியப் பயணி ஒருவரின் உடைமைகளைச் சோதனையிட்டபோது, இந்தப் போ-*ப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பயணியைச் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி, டெல்லி விமான நிலையத்தின் முனையம் 3-க்கு ஏர் இந்தியா விமானம் AI-2335 மூலம் பாங்காக்கில் இருந்து வந்த பயணியைச் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவரது உடைமைகளைச் சோதனையிட்டபோது, வெள்ளி நிற டிராலி பையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
அந்தப் பையில் 13 பாலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12.86 கிலோ எடையுள்ள க*சா இருப்பது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போ*ப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.4.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புச் சட்டமான NDPS சட்டத்தின் கீழ் அந்தப் பயணி கைது செய்யப்பட்டார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து போ*ப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள க*சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.
