செய்திகள்

“100 முறை கேட்டேன்!” – விஜய்யிடம் திருமணம் குறித்து ராஷ்மிகா சொன்ன ரகசியம்!

“100 முறை கேட்டேன்!” – விஜய்யிடம் திருமணம் குறித்து ராஷ்மிகா சொன்ன ரகசியம்!

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களுடைய காதல் மற்றும் திருமணம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், அவர்களின் பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, திருமணம் செய்துகொள்ளலாம் என்று விஜய்யிடம் ராஷ்மிகா பலமுறை கேட்டதாக அவர் கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

பிரபல இயக்குநரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான கரண் ஜோஹர் நடத்தும் ‘Koffee With Karan’ சீசன் 9 நிகழ்ச்சியின் புரோமோவில் இந்த சுவாரஸ்யமான உரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் தங்களுடைய உறவு குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.

அப்போது, ராஷ்மிகாவிடம் திருமணத்திற்காக முதலில் யார் முன்மொழிந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக விஜய், ராஷ்மிகாதான் “நாம் திருமணம் செய்துகொள்ளலாம்” என்று கூறியதாகத் தெரிவித்தார். மேலும், அவர் இதைச் சுமார் 100 முறை கேட்டதாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்

இதுகுறித்து ராஷ்மிகாவிடம் கேட்டபோது, “ஒரு வருடம் முழுவதும் அவரிடம் கேட்டேன்” என்று அவர் பதிலளித்தார். இருவருக்கும் இடையிலான இந்த நகைச்சுவையான உரையாடல் நிகழ்ச்சியின் புரோமோவில் இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

நிகழ்ச்சியில் மற்றொரு சுவாரஸ்யமான தருணத்தில், தனது சக நடிகர்களில் யாருடன் சிறந்த திரை வேதியியல் இருப்பதாக விஜய் கருதுகிறார் என்று கரண் ஜோஹர் கேட்டார். அதற்கு ராஷ்மிகா உடனடியாக “யாருமில்லை” என்று கூறினார். இதற்குப் பதிலளித்த விஜய், “திருமண விதி எண் 101 — மனைவி சொல்வதை ஒத்துக்கொள்ள வேண்டும்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

இவ்வாறு காதல், திருமணம் மற்றும் திரையுலக அனுபவங்கள் குறித்த இருவரின் உரையாடல்கள் தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *