செய்திகள்

நெட்ஃபிளிக்ஸ் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ‘பத்தா’!

நெட்ஃபிளிக்ஸ் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ‘பத்தா’!

இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் மற்றும் சிறுவன் சாய் பிருத்விராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பத்தா’. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து இப்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது 12 நாடுகளில் நெட்ஃபிளிக்ஸின் டாப் 10 பட்டியலில் ‘பத்தா’ இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், உலகளவில் ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களுக்கான பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மூலம் மனிதநேயத்தை எடுத்துரைக்கும் இப்படம், ஓடிடி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.