செய்திகள்

தங்கம் வாங்கப் போறீங்களா? இன்றைய விலை நிலவரம் இதோ!

தங்கம் வாங்கப் போறீங்களா? இன்றைய விலை நிலவரம் இதோ!

சென்னையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,10,200-க்கும், ஒரு கிராம் ரூ.13,775-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.1,09,440-க்கும், ஒரு கிராம் ரூ.13,680-க்கும் விற்பனையானது. இதனுடன் ஒப்பிடும்போது இன்று கிராமுக்கு ரூ.95 அதிகரித்துள்ளது

இதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.15,028-க்கும், 8 கிராம் ரூ.1,20,224-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இருந்த விலையை விட கிராமுக்கு ரூ.5 மற்றும் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சர்வதேச சந்தை நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் நகை வாங்க திட்டமிடுபவர்கள் அன்றைய விலையை சரிபார்த்து வாங்குவது முக்கியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *