செய்திகள்

“பெண்கள் பாதுகாப்பு எங்கே?” – வண்டலூர் சம்பவத்தில் உதயநிதி கடும் கேள்வி!

“பெண்கள் பாதுகாப்பு எங்கே?” – வண்டலூர் சம்பவத்தில் உதயநிதி கடும் கேள்வி!

சென்னை வண்டலூர் அருகே கண்டிகையில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வெளியான புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை என்றும், பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்றும் முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், பள்ளி வளாகத்திலேயே மாணவிக்கு இத்தகைய சம்பவம் நடந்ததாக கூறப்படுவது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், தாம்பரம் மாநகர காவல்துறை வெளியிட்ட விளக்கத்தில், புகார் கிடைத்த உடனேயே FIR பதிவு செய்யப்பட்டதாகவும், CCTV காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதுவரை புகாரில் கூறப்பட்டபடி சம்பவம் நடைபெற்றதை உறுதிப்படுத்தும் ஆதாரம் கிடைக்கவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *