வங்கி வேலைநிறுத்தம் எதிரொலி! தமிழக அரசு ஊழியர்களுக்கு செப். 25-ம் தேதியே சம்பளம்
செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மாத இறுதியில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செப்டம்பர் மாத சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் செப்டம்பர் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமையே ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி வேலைநிறுத்தம் காரணமாக சம்பளம் கிடைப்பதில் ஏற்படக்கூடிய சிரமத்தை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
