செய்திகள்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! ₹185 முதல் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! ₹185 முதல் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! ₹185 முதல் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!

மொபைலில் இணைய வசதியைப் பயன்படுத்தாமல், அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தேவையில்லாத இணைய வசதிக்காகக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI), இணைய வசதி இல்லாமல் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை மட்டும் வழங்கும் திட்டங்களையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்த விதிமுறைகளை அக்டோபர் 21ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஏர்டெல் நிறுவனம் மூன்று புதிய வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் ₹185, ₹203 மற்றும் ₹206 என்ற விலைகளில் கிடைக்கின்றன.

புதிய ரீசார்ஜ் திட்டங்களின் விவரங்கள் என்ன?

  • ₹185 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டி.
  • ₹203 திட்டம்: 30 நாட்கள் வேலிடிட்டி.
  • ₹206 திட்டம்: ஒரு காலண்டர் மாதத்திற்கான வேலிடிட்டி.

இந்த மூன்று திட்டங்களிலும் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், 300 எஸ்எம்எஸ் ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், மொபைல் டேட்டா சலுகை இதில் இடம்பெறவில்லை.

யாருக்கு இந்தத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்?

இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள், இணைய வசதி அதிகம் தேவைப்படாதவர்கள், சாதாரண பட்டன் செல்போன்களைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் வைஃபை வசதியை மட்டுமே நம்பியிருப்பவர்கள் இந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பாக, இணைய வசதி தேவையில்லாதவர்கள் தங்களுக்குத் தேவையான அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு மட்டும் ரீசார்ஜ் செய்வதற்கான வாய்ப்பை இந்தத் திட்டங்கள் வழங்குகின்றன.

ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ஜியோ, வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதுபோன்ற திட்டங்களை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடையே எழுந்துள்ளது.