செய்திகள்

வங்கம் வரை விரிந்த தவெக! முதல் கட்சி அலுவலகம் திறப்பு!

வங்கம் வரை விரிந்த தவெக! முதல் கட்சி அலுவலகம் திறப்பு!

தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் அமைப்பை தமிழ்நாட்டைத் தாண்டி விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள பகுபூர் பகுதியில் தவெகவின் முதல் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த அலுவலகத் திறப்பு நிகழ்ச்சியில், தவெகவின் மேற்கு வங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் மூலம் மேற்கு வங்கத்தில் கட்சியின் அமைப்புப் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்டை மாவட்டங்களான பிர்பூம், பாங்குரா மற்றும் புருலியா உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் அமைப்பு இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக நேரடி அரசியல் நிகழ்ச்சிகளை நடத்துவதைவிட, நலத்திட்ட உதவிகள் மற்றும் சமூகப் பணிகள் மூலம் பொதுமக்களைச் சந்தித்து கட்சியின் அமைப்பை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைத் தாண்டி பிற மாநிலங்களிலும் கட்சி அமைப்பை உருவாக்கும் இந்த நடவடிக்கை, தவெகவின் எதிர்கால தேசிய அளவிலான அரசியல் விரிவாக்கம் குறித்த கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *