செய்திகள்

GOOGLE-க்கு பிறந்தநாள்! செப்.27-ல் கொண்டாடுவது ஏன்?

GOOGLE-க்கு பிறந்தநாள்! செப்.27-ல் கொண்டாடுவது ஏன்?

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தினசரி பயன்படுத்தும் Google, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1998-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது கூகுள் தனது பிறந்தநாளை செப்டம்பர் 27-ம் தேதி கொண்டாடி வருகிறது.

கூகுள் தொடங்கிய முதல் 7 ஆண்டுகளில், செப்டம்பர் 4-ம் தேதியே பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. பின்னர், தனது தேடுபொறியில் அதிகளவிலான வலைப்பக்கங்களை பட்டியலிட்ட முக்கியமான சாதனையை நினைவுகூரும் வகையில், 2006-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 27-ம் தேதியை பிறந்தநாளாகக் கொண்டாடத் தொடங்கியது.

இன்றைக்கு தேடல் சேவை மட்டுமின்றி, Gmail, Google Maps, YouTube, Google Drive உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கூகுள் சென்றடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *