செய்திகள்

“என்னை மீறி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடியாது” – சீமான்

“என்னை மீறி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடியாது” – சீமான்

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய சீமான், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராடி வருவதாகக் குறிப்பிட்டார்.

“என்னை மீறி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடியாது. நான் அய்யனார் சாமி போல காவலுக்கு நிற்பேன்” என்று சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் 8 வழிச்சாலை மற்றும் பேனா நினைவுச் சின்னம் தொடர்பான திட்டங்களையும் மக்கள் போராட்டங்கள் மூலம் தடுத்ததாக அவர் கூறினார்.

“நான் சட்டமன்றத்திற்கு வரும்வரை நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்” என்றும் சீமான் தனது பிரசாரத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்து, தேர்தல் அரசியல், திமுக–அதிமுக தொடர்பான விமர்சனங்கள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் சீமான் தனது கருத்துகளை முன்வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *