Asian Cup 2026 | தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய கிரிக்கெட்டின் தங்க மகள்கள்..!
ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது

தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து, சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். ஷபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 17 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுடானார்.
இறுதிக்கட்டத்தில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 216 ரன்கள் குவித்தது.

217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தடுமாறினர்.
கேப்டன் சமாரி அதபத்து மட்டும் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். கவிஷா தில்ஹாரி 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
இந்திய அணியின் சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும், ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சரணி மற்றும் ஷபாலி வர்மா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி பட்டம் என இரண்டையும் தட்டித் தூக்கினார் ஷபாலி வர்மா

