நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம் விலை அதிரடி சரிவு
வாரத்தின் முதல்நாளான இன்று (செப்.28), சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,880 குறைந்துள்ளது.
இதனால், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,10,120-க்கும், ஒரு கிராம் ரூ.13,765-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக செப்டம்பர் 26-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,000-க்கும் விற்பனையான நிலையில், இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் நேற்று ஒரு கிராம் ரூ.250-ஆக இருந்த நிலையில், இன்று ரூ.245-ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலையும் சரிந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களின் கவனம் இன்றைய விலை நிலவரத்தின் மீது திரும்பியுள்ளது.
