செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடக்கம்! சென்னை உட்பட 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தொடக்கம்! சென்னை உட்பட 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று (அக். 15) தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, நீலகிரி, கோவை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி, பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகளைக் கவனித்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *