தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: மதுரையில் களைகட்டும் ஏற்பாடுகள்!
தமிழக அரசு அறிவித்துள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் விழாவை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது நிகழ்ச்சி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இடம் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, செப்டம்பர் 28-ம் தேதி முதல்வர் விஜய் மதுரை வருவதையொட்டி ராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சாலை அமைத்தல், தூய்மைப் பணிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
