செய்திகள்

வேலை செய்யும்போது கை வலிக்குதா? இத யூஸ் பண்ணி பாருங்க அப்போ !

வேலை செய்யும்போது கை வலிக்குதா? இத யூஸ் பண்ணி பாருங்க அப்போ !

கம்ப்யூட்டரில் தினமும் வேலை செய்பவர்களுக்கு மவுஸ் என்றாலே அதிகமான features இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எழுதுவது, இணையத்தில் browsing செய்வது, documents பார்ப்பது, ஒரு app-ல் இருந்து இன்னொரு app-க்கு மாறுவது போன்ற அன்றாட வேலைகளுக்கு முக்கியமானது, மவுஸ் கைக்கு comfortable-ஆவும் பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும்.

அந்த வகையில், ASUS Wireless Mouse MD105 எளிமையான design-உடன், அன்றாட office வேலைகளுக்குத் தேவையான practical features-ஐ கொண்ட wireless mouse-ஆக இருக்கிறது.

இந்த மவுஸை சுமார் இரண்டு வாரங்கள் பயன்படுத்திப் பார்த்ததில், இதன் ergonomic design மற்றும் comfortable usage கவனிக்க வைக்கும் அம்சங்களாக இருக்கின்றன. 110 x 72 x 43 mm அளவில் இருக்கும் இந்த மவுஸ், battery இல்லாமல் வெறும் 66 கிராம் எடை கொண்டது. அதனால் நீண்ட நேரம் பயன்படுத்தும்போதும் கையில் அதிக சுமை ஏற்படுவதில்லை.

இதன் design-ல் thumb rest கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து பல மணி நேரம் வேலை செய்யும்போதும் கட்டைவிரலுக்கு நல்ல support கிடைக்கிறது. Flat-ஆக இருக்கும் travel mouse-களைவிட, கையின் வடிவத்துக்கு ஏற்ற ergonomic mouse-ஐ விரும்புபவர்களுக்கு இந்த design வசதியாக இருக்கும்.

Bluetooth + Wireless Connectivity

MD105-ன் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று இதன் connectivity. 2.4GHz wireless connection-க்கு USB dongle மூலமாகவும், Bluetooth மூலமாகவும் connect செய்ய முடியும்.

மேலும், மவுஸின் கீழ்பகுதியில் USB dongle-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தனியாக ஒரு சிறிய இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. Dongle தொலைந்து போகும் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள feature.

ஒரே நேரத்தில் மூன்று devices வரை connect செய்ய முடியும் என ASUS தெரிவிக்கிறது. இதன் wireless range சுமார் 10 மீட்டர் வரை இருக்கும்.

Office வேலைக்கு போதுமான Performance

இந்த மவுஸை பயன்படுத்துவதற்கு பெரிய setup எதுவும் தேவையில்லை. Connect செய்தவுடன் எளிதாக பயன்படுத்தத் தொடங்கலாம். Bluetooth மற்றும் wireless connectivity இருப்பதால் வெவ்வேறு devices-க்கு இடையில் மாறுவதும் சுலபமாக இருக்கிறது.

இதில் 1,200, 1,600 மற்றும் 2,400 DPI என மூன்று sensitivity options கொடுக்கப்பட்டுள்ளன. சாதாரண office வேலை, browsing மற்றும் வெவ்வேறு screen sizes கொண்ட devices-ல் பயன்படுத்துவதற்கு இந்த options போதுமானதாக இருக்கின்றன.

இதன் மற்றொரு முக்கியமான feature quieter clicks. Click செய்யும்போது அதிக சத்தம் வராததால், library, office அல்லது அமைதியான workspace-ல் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், பக்கவாட்டில் இரண்டு extra buttons கொடுக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப அவற்றை shortcuts-க்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Battery & யாருக்கு இந்த Mouse?

MD105 இயங்குவதற்கு ஒரு AA battery போதுமானது. அந்த battery-யும் box-லேயே கொடுக்கப்பட்டுள்ளது. Battery backup என்பது usage-க்கு ஏற்ப மாறுபடும் என்பதால், பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தே அதன் நீடிப்பு இருக்கும்.

இது gaming mouse அல்ல. குறிப்பாக high-performance gaming-க்காக உருவாக்கப்பட்ட product கிடையாது. முழுக்க முழுக்க office மற்றும் everyday use-ஐ மையமாகக் கொண்ட mouse.

அதேபோல், மிகவும் compact-ஆக இருக்கும் small mouse-ஐ தேடுபவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்காது. இதன் ergonomic shape காரணமாக வழக்கமான travel mouse-களைவிட சற்று பெரியதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *