செய்திகள்

Elon Musk-க்கு போட்டியா?? : 1600 செயற்கைகோள்களுடன் Internet சேவை – களமிறங்கும் Reliance Jio

இந்தியாவில் 1600 செயற்கைகோள்களை பயன்படுத்தி இணைய சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது

இந்தியாவில் அரசு நிறுவனமான BSNL நிறுவனத்திற்கு அடுத்து மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க்கை வழங்கி வருவது தொழிலதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆகும். ரிலையன்ஸ் ஜியோ, தனது நெட்வொர்க் கனெக்டிவிட்டியை மொபைல் டவர்கள் மற்றும் ஃபைபர் கேபிள்களை கடந்து செல்ல தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.

இதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் சுமார் 1,600 செயற்கைக்கோள்கள் மற்றும் 23 தரை நிலையங்களைக் கொண்ட தொழில்நுட்ப அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது

டெல்லியில் நான்கு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2026 நிகழ்வில், ஜியோ தனது செயற்கைக்கோள் இணைப்பு திட்டங்களை காட்சிப்படுத்தியது.

வழக்கமான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை உருவாக்குவது கடினமாக உள்ள இந்தியாவின் பகுதிகளை சென்றடைவதற்காக, தற்போதுள்ள தரைவழி வலையமைப்புடன் செயற்கைக்கோள்களையும் பயன்படுத்தும் நோக்குடன், இந்த திட்டத்தை அந்நிறுவனம் முன்வைக்கிறது.

ஜியோ நிறுவனம் முன்மொழிந்த இந்த வலையமைப்பில் சுமார் 1,600 புவி சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்கள் இடம்பெறும். மேலும், செயற்கைக்கோள் அமைப்பை தரைவழி உள்கட்டமைப்புடன் இணைக்கும் வகையில் 23 தரை நிலையங்களை அமைக்கவும் ஜியோ திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உட்பட, தரை மற்றும் கடல் பகுதிகள் முழுவதும் இணைப்பை வழங்குவதே இதன் பெரிய நோக்கம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் தொலைதூர கிராமங்கள், தீவுகள் மற்றும் எல்லை பகுதிகள் போன்ற இடங்களில் செயற்கைக்கோள் இணைப்பு பயனுள்ளதாக இருக்கும். தனது செயற்கைக்கோள் வலையமைப்பை ஒரு தனி இணைப்பு அமைப்பாக கருதுவதற்கு பதிலாக, ஜியோ அதை தனது தற்போதைய மொபைல் மற்றும் ஃபைபர் உள்கட்டமைப்புடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. தொலைதூர இடங்களுக்கும், விமான போக்குவரத்து, கடல்சார் செயல்பாடுகள், அரசு, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கும் இவை பயன்படுத்தலாம்.

ரிலையன்ஸ் ஜியோவை பொறுத்தவரை, ஃபைபர் கேபிள் பதிப்பது அல்லது கோபுரங்கள் அமைப்பது கடினமாகவோ அல்லது வணிக ரீதியாக சவாலாகவோ உள்ள இடங்களுக்குத் தனது வலையமைப்பை விரிவுபடுத்த செயற்கைக்கோள்கள் உதவக்கூடும்.

இந்தியாவில் ஒழுங்குமுறை செயல்முறைகள் நிறைவடைவதற்காக ஸ்டார்லிங்க் காத்திருக்கும் வேளையில், ஜியோவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *