‘AI கொல்லும்’ – பில் கேட்ஸ் அதிர்ச்சி எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவான AI-ன் வளர்ச்சி குறித்து மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான நேர்காணல் பகுதி ஒன்றில் பேசிய பில் கேட்ஸ், தீய நோக்கம் கொண்டவர்கள் நவீன AI கருவிகளை பயன்படுத்தினால், அதன் மூலம் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, AI மூலம் ஒரு பில்லியன், அதாவது 100 கோடி பேர் உயிரிழக்கும் அளவுக்கு நிகழ்வுகளை ஏற்படுத்த முடியும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், தீய நோக்கம் கொண்ட மனிதர்களின் கைகளில் சக்திவாய்ந்த AI கருவிகள் செல்வது மிகப்பெரிய ஆபத்தாக மாறலாம் என்றும் கூறியுள்ளார்.
AI மூலம் சைபர் தாக்குதல்கள், மோசடி மற்றும் உயிரியல் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் அதிகரிக்கக்கூடும் என்பது குறித்தும் கேட்ஸ் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளார். AI நிறுவனங்கள் தாங்களாகவே பாதுகாப்பை உறுதி செய்வது மட்டும் போதாது; அரசுகள் சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
