செய்திகள்

சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 23) மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.92,800 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பர் 21ஆம் தேதி ஒரு சவரன் ரூ.91,720க்கும், கிராம் ரூ.11,465க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

இதற்கிடையில், வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175க்கும், ஒரு கிலோ ரூ.1,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிந்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்த உயர்வு நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.