ரசிகர்களுக்கு செம்ம ஷாக்! Unreserved Train-ல் விஜய் ஆண்டனி!
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தனது திரைப்படத்தின் புரமோஷனுக்காக வித்தியாசமான முறையில் பயணம் செய்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் புரமோஷனை முன்னிட்டு, சென்னையிலிருந்து கோவைக்கு முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் அவர் பயணம் செய்துள்ளார்.
வழக்கமாக திரைப்பட புரமோஷன்களுக்காக பிரபலங்கள் கார், விமானம் அல்லது தனிப்பட்ட வசதிகளுடன் பயணம் செய்வது வழக்கம். ஆனால் விஜய் ஆண்டனி, சாதாரண பயணிகளுடன் Unreserved ரயில் பெட்டியில் பயணம் செய்தது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
அவருடன் பயணம் செய்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரைப் பார்த்து ஆச்சரியமடைந்ததுடன், இந்தப் பயணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வித்தியாசமான புரமோஷன் முயற்சியை மேற்கொண்ட விஜய் ஆண்டனியின் இந்த செயல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
