முதல் டி20 போட்டி: இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
உலகக்கோப்பை தொடர் நெருங்கி வருவதால் இந்த தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

