மனித வேகத்துக்கு சவால்…உசைன் போல்ட்டின் சாதனையை முந்திய ரோபோ…

சீனாவில் நடைபெறும் சர்வதேச ரோபோ விளையாட்டுப் போட்டிகளில் மனிதர்களுக்கு இணையாக ரோபோக்கள் ஓட்டப்பந்தயத்தில் அசத்தி வருகின்றன.

சீனாவின் ஆனர் நிறுவனம் உருவாக்கிய ‘லைட்னிங்’ ரோபோ, 100 மீட்டர் தூரத்தை 9.39 விநாடிகளில் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது உசைன் போல்ட்டின் 100 மீட்டர் உலக சாதனையான 9.58 விநாடிகளை விட வேகமான நேரமாகும்.

மேலும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சீன நிறுவனம் உருவாக்கிய ‘டியன்காங்’ ரோபோ 38.15 விநாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம் வென்றது.

அதேநேரத்தில், போட்டியில் பங்கேற்ற சில ரோபோக்கள் தடுப்புகளில் மோதி தடுமாறி விழுந்த சம்பவங்களும் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *