ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : அதிபர் புதினின் கட்சி முன்னிலை..!

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு அதிபர் புதினின் கட்சி முன்னிலை வகித்து வருகிறது

ரஷ்ய அதிபரும் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவருமான விளாடிமிர் புதின் அதிபர் பதவியில் 20 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறார். 1999 முதல் ரஷ்ய அரசியலில் முன்னணி தலைவராக இருந்து புதின் 26 வருடங்களாக அதிகாரத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரஷ்யாவில் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

சர்வதேச அளவில் உக்ரைன் ரஷ்யா போர் பெரும் பதற்றத்தையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தி வரும் நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு முதல்முறையாக நடைபெறும் தேர்தல் இது என்பது மீண்டும் ரஷ்ய அரசியல் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயன்றதால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா 2022-ஆம் ஆண்டில் போா் தொடுத்தது.

அதன்பிறகு முதல்முறையாக ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவையில் உள்ள 450 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலின் வாக்குப்பதிவு செப். 18 முதல் 20 வரை நடைபெற்றது.

வழக்கம்போல ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் விளாதிமீர் புதின் தலைமையிலான ஐக்கிய ரஷ்ய கட்சி முன்னிலை வகித்து வருகின்றது.

உக்ரைனின் கடும் தாக்குதலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில் 56.66 சதவிகிதம் மக்கள் வாக்களித்ததாக ரஷ்ய தேர்தல் ஆணையம் அறிவித்தது. நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 58 சதவிகித வாக்குகளை புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவையில் தனது கட்சியின் பெரும்பான்மையை புதின் மீண்டும் உறுதி செய்துள்ளார்.

இந்த தேர்தலின்போது, உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், கொ்சன், ஸபோரிஷியா பிராந்தியங்களிலும் ரஷ்யா தேர்தல் நடத்தியதற்கு உக்ரைனும், ஐரோப்பிய யூனியனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *