பாரடைஸ் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் சொன்ன விமர்சனம் இதோ!
நானி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘பாரடைஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

‘தசரா’ படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். ராகவ், சம்பூர்ணேஷ், மோகன் பாபு, சோனாலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியான நிலையில், சிறப்பு காட்சியை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, படத்தின் ‘Aaya Sher’ பாடல், நானியின் அறிமுக சண்டைக்காட்சி மற்றும் ஹோட்டல் சண்டைக்காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், படத்தின் கதை மற்றும் திரைக்கதை குறித்து சில ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கதையில் புதுமை இல்லை என்றும், வில்லன் கதாபாத்திரங்கள் வலுவாக இல்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், படத்தில் இடம்பெறும் அதிகப்படியான வன்முறை மற்றும் ரத்தக் காட்சிகள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத்தின் பின்னணி இசையும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என சில ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்தத்தில், ‘பாரடைஸ்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளுக்கு பாராட்டு கிடைத்தாலும், கதை மற்றும் திரைக்கதை குறித்து எதிர்மறையான கருத்துகளும் வெளியாகி வருகின்றன.
