செய்திகள்

தங்கம் விலை மீண்டும் சரிவு! இன்று சவரனுக்கு ரூ.1,080 குறைவு

தங்கம் விலை மீண்டும் சரிவு! இன்று சவரனுக்கு ரூ.1,080 குறைவு

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இன்று, செப்டம்பர் 24ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்துள்ளது.

இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும், ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,135க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில், இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.

கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 வரை குறைந்துள்ளது.

இதனிடையே, வெள்ளி விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால், நகை வாங்க திட்டமிடுபவர்கள் இன்றைய விலை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *