அதிமுகவின் நிலை இதுதான்!” – மதுராந்தகத்தில் விஜய் பேசியது என்ன?
மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு, அச்சரப்பாக்கம் அருகே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்தக் கூட்டத்தில் சுமார் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தனது உரையைத் தொடங்கிய விஜய், “முதலமைச்சராக வரவில்லை; இடைத்தேர்தலுக்கு வாக்குக் கேட்டு உங்கள் வீட்டுப் பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக வந்திருக்கிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண்கள் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து தனது அரசின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
அப்போது அதிமுகவை விமர்சித்த விஜய், “அதிமுக தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது” என்று குற்றம்சாட்டினார். மேலும், திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.
திமுக தன்னைப் பற்றியும் தனது கட்சியைப் பற்றியும் தொடர்ந்து விமர்சித்து வருவதாகக் கூறிய விஜய், அதற்கு அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் மறைமுகமாக ஆதரவளிப்பதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.
மேலும், ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்த விஜய், அரசியலுக்கு வருவதற்கு முன்பும் வந்த பிறகும் அரசியல்வாதிகளின் சொத்து விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக்கொண்டார்.
மேலும், “தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கான திமுகவின் மனக்கணக்கு பலிக்காது; தமிழ்நாட்டு மக்களுக்கும் எனக்கும் இருப்பது பாசக்கணக்கு” என்றும் விஜய் தனது உரையில் தெரிவித்தார்.
மதுராந்தகம் இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது; வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறுகிறது.
