திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த ஷீராலால்! ராஜகோபுரம் முன் சிறப்பு பூஜை !
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஷீராலால் என்ற ஆண் யானை தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வந்த ஷீராலாலுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் ராஜகோபுரம் முன்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. யானைக்கு மாலை அணிவித்து, மலர்கள் மற்றும் பழங்கள் வைத்து வழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து யானை கோயில் வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. ஷீராலாலை காண திரண்ட பக்தர்கள், ஆர்வத்துடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தனர்.
அண்ணாமலையார் கோயிலில் புதிய யானையின் வருகை பக்தர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
