செய்திகள்

மெடிக்கலில் மருந்து வாங்கியபோது திடீர் மயக்கம்.. கேபிள் உரிமையாளர் உ*ரிழப்பு – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

மெடிக்கலில் மருந்து வாங்கியபோது திடீர் மயக்கம்.. கேபிள் உரிமையாளர் உ*ரிழப்பு – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

திருவாரூரில் மெடிக்கல் கடையில் மருந்து வாங்கிக் கொண்டிருந்த கேபிள் உரிமையாளர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உ*ரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் நகரப் பகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன், கேபிள் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று உடல்நிலை சரியில்லாததால் திருவாரூர் பனகல் சாலையில் உள்ள தனியார் மெடிக்கல் ஒன்றுக்கு மருந்து வாங்க சென்றுள்ளார்.

மருந்து வாங்கிக் கொண்டிருந்தபோது, மெடிக்கல் கடைக்குள் நின்றிருந்த சாமிநாதன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மெடிக்கல் கடை உரிமையாளர் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உய*ரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சாமிநாதன் மெடிக்கல் கடையில் திடீரென மயங்கி கீழே விழும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *