செய்திகள்

கடத்தலை துணிச்சலுடன் தடுத்த தலைமைக் காவலர்.. நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் விஜய்!

கடத்தலை துணிச்சலுடன் தடுத்த தலைமைக் காவலர்.. நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் விஜய்!

கோவை மாவட்டத்தில் குட்கா கடத்தலை தடுத்து, குற்றவாளிகளை பிடிக்க தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் செயல்பட்ட கோவில்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் வேல்முருகனை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி, குட்கா பொருட்களை கடத்திச் சென்றவர்கள் காரில் தப்பிச் செல்ல முயன்றபோது, தலைமைக் காவலர் வேல்முருகன் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது, தப்பிச் சென்ற காரின் மேற்கூரையில் ஏறிய அவர், குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்கும் நோக்கில் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் மிகுந்த துணிச்சலுடன் பயணித்தார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம், அந்த கார் அவிநாசி அருகே மடக்கிப் பிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 233 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையிலும், கடமை உணர்வுடன் செயல்பட்ட தலைமைக் காவலர் வேல்முருகனின் துணிச்சல், சமயோசிதமான நடவடிக்கை மற்றும் கடமை உணர்வை பாராட்டும் வகையில், முதலமைச்சர் விஜய் அவரை நேரில் அழைத்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும் தலைமைக் காவலர் வேல்முருகனை நேரில் சந்தித்து, அவரது துணிச்சலான செயலையும் சிறப்பான கடமை உணர்வையும் பாராட்டியுள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையிலும், குற்றவாளிகளை தடுக்க துணிச்சலுடன் செயல்பட்ட தலைமைக் காவலர் வேல்முருகன் (HC 456)-ன் வீரதீர செயல் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *