செய்திகள்

விமான பயணிகளுக்கு ஷாக்.. இன்று முதல் இண்டிகோ டிக்கெட் கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

விமான பயணிகளுக்கு ஷாக்.. இன்று முதல் இண்டிகோ டிக்கெட் கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் எரிபொருள் கூடுதல் கட்டணம் இன்று (அக்.6) முதல் உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் எனப்படும் ATF விலை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து இந்தக் கட்டண மாற்றத்தை இண்டிகோ அறிவித்துள்ளது.

அதன்படி, உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணம், பயணிக்கும் தூரத்தைப் பொறுத்து ரூ.100 முதல் ரூ.350 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 500 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.375, 501 முதல் 1,000 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.600, 1,001 முதல் 1,500 கி.மீ. வரை ரூ.900, 1,501 முதல் 2,000 கி.மீ. வரை ரூ.1,150 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2,000 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.1,300 எரிபொருள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

சர்வதேச விமானங்களுக்கும் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சார்க் நாடுகளுக்கான பயணங்களுக்கு தூரத்தைப் பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியா, வளைகுடா, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு, கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமானங்களுக்கு ரூ.5,500, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ.6,000, ஐரோப்பிய நாடுகளுக்கான விமானங்களுக்கு ரூ.10,000 வரை எரிபொருள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த புதிய கட்டணங்கள் அக்டோபர் 6-ம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்குப் பிறகு செய்யப்படும் புதிய முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது.

விமான எரிபொருள் விலை கடந்த மாதத்தை விட 14 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ATF செலவு அதிகரித்துள்ளதால், இந்த மாற்றம் அவசியமானதாக இருப்பதாகவும் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *