மின்வாரிய சேவையில் தற்காலிக பாதிப்பு.. மின்னகம் குறித்து அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் மின்சாரம் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யும் ‘மின்னகம்’ சேவையின் தொலைபேசி அழைப்பு வசதி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மின்னகம் சேவைக்கான 94987 94987 என்ற உதவி எண்ணில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மின்வெட்டு உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், அதே 94987 94987 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தங்களது புகார்களைப் பதிவு செய்யுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மின்தடை, மின்சார விநியோகக் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மக்கள் இந்த மாற்று வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தொலைபேசி சேவை மீண்டும் சீராகும் வரை பொதுமக்கள் வாட்ஸ்அப் வாயிலாகப் புகார்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
