செய்திகள்

தென் சென்னையில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் நிறுத்தம்! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?

தென் சென்னையில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் நிறுத்தம்! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?

சென்னையின் தெற்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தென் சென்னையின் குறிப்பிட்ட பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

இதன்படி, அக்டோபர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் அக்டோபர் 11ஆம் தேதி காலை 9 மணி வரை குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்படும் பகுதிகள்:

அடையாறு மண்டலம்: திருவான்மியூர், பள்ளிப்பட்டு, கோட்டூர் கார்டன், ஆர்.கே. மடம் சாலை, இந்திரா நகர்.

பெருங்குடி மண்டலம்: கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம்.

சோழிங்கநல்லூர் மண்டலம்: ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில் நகர், கண்ணகி நகர், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வெட்டுவாங்கேணி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, ஒக்கியம்–துரைப்பாக்கம்.

நெம்மேலி நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்தத் தற்காலிகத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே தங்களுக்குத் தேவையான குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவசரத் தேவைகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளம் வாயிலாக டேங்கர் லாரி குடிநீரைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் நேரத்தைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *