மழையையும் தாண்டி தியேட்டர்களில் மாஸ் காட்டும் ஜெயிலர் 2! 6 நாட்களில் ₹541 கோடி வசூல்!
ஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம், வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.541 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வார நாட்களிலும் வசூல் அதிகரித்து வருவது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ஜெயிலர் 2 – பிரம்மாண்ட வசூல் வேட்டை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் 2. கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது.
அக்டோபர் 15-ம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே. சூர்யா, ஜாக்கி ஷெராஃப், ரித்திக் ரோஷன், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் கலந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. மழை உள்ளிட்ட சூழல்களையும் தாண்டி திரையரங்குகளில் ரசிகர்கள் வருகை தொடர்வதாகக் கூறப்படுகிறது.
6 நாட்களில் எவ்வளவு வசூல்?
வெளியான ஆறு நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.541 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் ரூ.337 கோடி மொத்த வசூலும், வெளிநாடுகளில் ரூ.204 கோடி வசூலும் அடங்கும் என பாக்ஸ் ஆபீஸ் கணக்கீடுகள் குறிப்பிடுகின்றன.
குறிப்பாக, ஐந்தாவது நாளுடன் ஒப்பிடும்போது ஆறாவது நாளிலும் வசூல் உயர்ந்திருப்பது படக்குழுவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலிலும் இப்படம் இடம்பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்தின் நடிப்பு, நெல்சனின் இயக்கம் மற்றும் அனிருத்தின் இசை என ரசிகர்களைக் கவரும் அம்சங்களுடன் ஜெயிலர் 2 தொடர்ந்து வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது.
