செய்திகள்

நாகூர் தர்கா கந்தூரி விழா: 45 கிலோ சந்தனக்கட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு!

நாகூர் தர்கா கந்தூரி விழா: 45 கிலோ சந்தனக்கட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், நவம்பர் 10ஆம் தேதி தொடங்கவுள்ள நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, தர்காவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை இலவசமாக வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் சந்தனம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்காகத் தமிழக அரசு சந்தனக்கட்டைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மத நல்லிணக்கத்திற்கும், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களின் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக நாகூர் தர்கா திகழ்கிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.